தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்த சஜித்: யோகேஸ்வரன் குற்றச்சாட்டு
நல்லாட்சிக்காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்குவந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் ஆட்சிக்குவந்தால் தமிழ் மக்களின் நிலைமைகள் என்னவாகும் என சிந்தித்துப்பாருங்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு அமைச்சராகயிருந்தபோது எங்களை அழைத்து எங்களது பிரச்சினைகளை தீர்க்கமுடியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பாரா எனவும் கேள்வியெழுப்பினார்.
தமிழ் மக்களின் பிரச்சினை
மேலும், தாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிபேசும் சிங்கள தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்திப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக எமது பிரச்சினைகளை நாங்கள் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் ரணிலோ,சஜித்தோ தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், குறைந்தது இந்தியாவின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட 13வது திருத்ததினை கூட நிறைவேற்றமுடியாத நிலையில் இவர்களினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வினை வழங்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
