வாக்காளர்களுக்கு முக்கிய தகவல்! சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முறைகேடான வகையில் செயற்படும் வாக்காளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வருடகால சிறைத் தண்டனையும் 02 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும். அத்துடன் ஏழு ஆண்டுகளுக்கு வாக்களிக்கவும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இந்த தண்டனை விதிக்கப்படும் என, ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.
கடுமையான தண்டனை
கள்ள வாக்களிக்கும் நபர்களுக்கு மேல் நீதிமன்றத்தினூடாக கடுமையான தண்டனைகளை வழங்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடுமென பல கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
வாக்குப் பெட்டி
அதற்கமைய, வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும்போது விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
அந்த வாகனத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் இருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பின்தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
