தேர்தலைத் தடுப்பதற்கு கூட்டுச் சதி செய்யும் அரசாங்கம்: நாடாளுமன்றத்தில் சஜித்
நாட்டின் தேர்தலை நடத்தாமல் தடுப்பதற்கு இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசாங்கம் கையாண்டுள்ளததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (07.03.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "இந்நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசு தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்கக் கடுமையாக முயற்சித்து வருகின்றது.
தேர்தலை நடத்தாமல் தடுக்க இதுவரை சுமார் 22 விதமான கூட்டுச் சதிகளை அரசு கையாண்டுள்ளது.
அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு
நிதியை வழங்காமல் இருப்பதுதான் அரசின் கடைசி முயற்சியாகத் தெரிகின்றது. இது
ஜனநாயகத்தை நசுக்கும் விடயமாகவும் அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.




