மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்: எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

Sajith Premadasa Samagi Jana Balawegaya Economy of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rakesh Sep 17, 2024 02:50 PM GMT
Report

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகள் அத்தோடு கட்சிகளைச் சாராத குழுக்களில் உள்ளவர்கள் என அனைவரையும் நாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு மனிதநேயத்தின் நாமத்தினால் பாதுகாப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 65 ஆவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஹெட்டிபொல நகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், 

புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்

புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்

 

மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்: எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு | Sajith Premadasa Election Speech

வறுமையை ஒழிப்போம்

"வறுமையை ஒழிக்கும் முகமாக அனைத்து வறிய குடும்பங்களுக்கும் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் முதலீடு, உற்பத்தி, நுகர்வு, சேமிப்பு மற்றும் ஏற்றுமதி ஆகிய பிரிவுகளுக்குள்ளடக்கி நிவாரணங்களை வழங்குவோம். எவரும் தொடர்ந்தும் வறியவர்களாக இருப்பதற்கு விருப்பமில்லாமை

நாம் வறுமையே ஒழிப்போம். தமக்கென்று வீடும் காணியுமில்லாதவர்களுக்கு வீட்டையும் காணிக்கான உரிமையும் பெற்றுக் கொடுப்போம். 50 கிலோ கிராம் உள்ள உர மூடை ஒன்றை 5000 ரூபாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும்.

பெரிய வெங்காய உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம். பெரிய வெங்காயம், சோளம், உருளைக்கிழங்கு என்பன அறுவடை செய்யப்படுகின்ற போது ரணில் விக்ரமசிங்க அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்.

விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கின்ற நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும்.

மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்: எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு | Sajith Premadasa Election Speech

விவசாயிகளுக்கு நிவாரணம்

விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரம் வழங்குகின்ற அதேவேளை விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும், ஓட்டோ உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும், சக்தி அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம்.

இந்த எரிபொருள் நிவாரணம் செல்வந்தர்களுக்கு வழங்கப்படமாட்டாது. எரிபொருள் நிவாரணத்தை தொழிலாளர் வர்க்கத்திற்கே வழங்குவோம். செல்வந்தர்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்க வேண்டிய தேவை இல்லை.

மனித நேயத்தின் நாமத்தினால் அனைவரையும் பாதுகாப்போம்: எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு | Sajith Premadasa Election Speech 

இந்த நாட்டில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களை மையப்படுத்தி ஜனாதிபதி அபிவிருத்தி செயலணி ஒன்றை உருவாக்குவோம். அதன் ஊடாக அனைத்து நிர்வாக மாவட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரடியாக கண்காணிப்போம்.

அத்தோடு ஜனாதிபதியை மக்கள் தொடர்பு கொள்வதற்கு தனியான அலகொன்றையும் நிறுவுவோம். மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முறையான தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு கிராமங்களையும் நகரங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் கம் உதாவ நகர உதாவ வேலை திட்டங்களை மேற்கொள்வோம்." - என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

 


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US