சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படும் சஜித் பிரேமதாசவின் மகளது புகைப்படம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக அண்மையில் அறிவித்த நிலையில், சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
கடந்த சனிக்கிழமை கண்டியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய சஜித் பிரேமதாச தனக்கொரு பெண் குழந்தை இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் அவருடைய மனைவி ஜலனி பிரேமதாசவும் கலந்து கொண்டிருந்தார்.
சஜித் பிரேமதாச மகள்
இந்த கூட்டத்தின் போது பெண்கள் நலனுக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விபரித்திருந்தார்.
அத்துடன், அண்மையில் தன்னுடை மகளை அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு தங்களுடைய மகளுக்காக கோரிய குறிப்பிட்ட ஊசி கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் பின்னரான நாட்களில் சஜித் பிரேமதாசவின் மகள் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.