3வது நாளாகவும் நீடிக்கும் பிக்குகளின் சத்தியாகிரகப் போராட்டம்
விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகப் போராட்டம் இன்று (18.10.2026) தொடர்ந்து 3வது நாளாகவும் நீடிக்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
முன்னதாக, கண்டியிலிருந்து கொழும்பு வரை நடைபயணம் மேற்கொண்ட பிக்குகள், அக்டோபர் 16 மாலை கொழும்பை வந்தடைந்தனர்.
பதற்றமான சூழல்
அன்றைய தினம் கூடாரம் அமைக்க முற்பட்டபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் செயலாளருடன் அக்டோபர் 16 அன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, விஹாரமகாதேவி பூங்காவை விட்டு வெளியேறப்போவதில்லை என பிக்குகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அக்டோபர் 17 இரவு மீண்டும் பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குற்றச்சாட்டு
பொலிஸார் கஸ்ஸப தேரரை தாக்கியதாக பிக்குகள் மற்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.

ஆனால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதை மறுத்து, தேரர் தற்செயலாக கீழே வீழ்ந்ததாகத் தெரிவித்தார்.
அதேநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், தனக்கு மருத்துவ சிகிச்சை தேவையில்லை எனக் கூறி சுமார் ஒரு மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறிவிட்டார் எனவும் தெரியவருகிறது.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan