முல்லைத்தீவில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரை கூட்டம்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்று (02.09.2024) காலை முல்லைத்தீவு முள்ளியவளை கீச்சிராபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த மாபெரும் கூட்டத்தில், சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள்
இதேவேளை, நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சின்னராசா யோகேஸ்வரன் ஆகியோரும் குறித்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு - கிழக்கில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிப்பு: ரணில் சுட்டிக்காட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |