வீதித் தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
“பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக உள்ள வீதித் தடைகளை அகற்றுமாறு” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
“மக்கள் அதிகாரத்தின் சுனாமியை கண்ட அரசாங்கம் தனது அதிகாரத்தை பாதுகாப்பதற்காக மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு கோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வீதிகளை தடை செய்யும் வகையில் நிரந்தர வீதித் தடைகளை நிறுவியமையே அதன் செயற்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொழும்பிற்குள் பிரவேசிப்பதற்கு ஏனைய வீதிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் அரசாங்கத்திற்குள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் , அதேவேளை வீதித் தடைகளினால் இவ்வாறான பாரிய போராட்டங்களை நிறுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நாட்டின் குடிமக்களில் அங்கம் வகிக்கும் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமையை அரசாங்கமோ அல்லது வேறு எந்த சக்தியோ மீற முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் தற்போது பயங்கரவாத முறையிலான அடக்குமுறையை பயன்படுத்தி நிரந்தர வீதித் தடைகளை அமைத்து எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அதனை மாற்றியமைக்க அரசாங்கத்திடம் துருப்புச் சீட்டு எதுவும் இல்லை எனவும், நாட்டை மீளக் கட்டியெழுப்புவது பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்கு எதிரான அரசாங்கத்தின்
தன்னிச்சையான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இறுதி
நேரத்திலோ அல்லது இறுதியிலோ மக்கள் அழுத்தத்தை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும்” அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



