சஜித் பிரேமதாசவை புறக்கணித்த ஈரானிய தூதரகம்: நாடாளுமன்றில் தகவல்
ஈரானிய ஜனாதிபதியை சந்திப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஈரானிய தூதரகம் நேரம் ஒதுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், இப்ராஹிம் ரைசியை சந்திப்பதை சஜித் பிரேமதாச தவிர்க்கவில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இராப்போசன நிகழ்வு
அதேவேளை, ஈரானிய ஜனாதிபதிக்காக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏற்பாடு செய்திருந்த இரவு போசன நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்கவில்லை என்றும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்யும் இராப்போசன நிகழ்வில் ஒருபோதும் பங்கேற்பதில்லை என்ற அடிப்பபடையிலேயே சஜித் பிரேமதாச, ஈரானிய ஜனாதிபதிக்கான இராப்போசன நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்று நளின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |