யாழில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் (Video)
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று அனலைதீவில் இடம்பெற்ற அரசியல் பொதுக்கூட்டத்திலும் கலந்துக்கொண்டுள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்சிகளிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக்கொண்டுள்ளார்.
விசேட பூஜை வழிபாடு
இந்த நிலையில் இன்று மதியம் அனலைதீவுக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
பின்னர் அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துக்கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவு ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரக்கூட்டம்
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் சஜித் பிரேமதாசாவின்
பங்குபற்றுதலோடு யாழ்ப்பாணம் றக்கா வீதியில் இடம்பெற்றது.
இதன்போது சஜித் பிரேமதாசவுக்கு மலர்தூவி பாரம்பரியமான முறையில் மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.
சஜித் பிரேமதாச உரையாற்றுகையில், நாட்டில் அனைவருக்கும் தேர்தல் பற்றிய நினைவு உள்ளது. எனினும் ஜனாதிபதி ரணிலுக்கு மாத்திரம் தேர்தல் பற்றி நினைவில் இல்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மக்களுக்கு என்னாலான அபிவிருத்திபணிகளை மேற்கொண்டு வருகின்றேன். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் பல மாற்றங்களை செய்வேன்.
யாழ் மாவட்டத்திலுள்ள 10 தேர்தல் தொகுதிகளுக்கும் ஒரு தேர்தல் தொகுதிக்கு ஒரு
பேருந்து வீதம் வழங்குவதற்கான உறுதிமொழி ஒன்றை எடுத்துள்ளேன் எனவும்
தெரிவித்தார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/b42ec951-e23a-4c1c-9708-b06a6005ae0b/23-63f7ac48cb489.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/8b83f8a3-ed4b-42df-9c39-021cd68ee4ba/23-63f7ac4930e32.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ee034f03-e14d-49e5-a062-439145bff243/23-63f7ac4988010.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e53880ee-6fae-4bd7-aa15-de10f5559510/23-63f7bba28c618.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e57e6ec5-4d38-4b06-b1c6-b2d6dfae68f1/23-63f7bba2c99e6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/160fc9c2-e236-4fa4-b24d-0d1f21d29b48/23-63f7bba310bb9.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d43f4285-fdec-49ad-9e89-04ef35f8376c/23-63f7bba350b22.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/22012877-8fdc-4387-b71e-0117636b96e2/23-63f7bba393755.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/22002db3-cca0-4445-805b-dec14be68f1d/23-63f7bba3d71af.webp)
![உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/f839fb3a-5864-4bf7-aa35-0580dcd1bbed/25-67a573453d466-sm.webp)
உலகம் முழுவதும் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
![பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா?](https://cdn.ibcstack.com/article/87592ec4-9db7-4b06-a590-3e55b177619b/25-67a59318638c0-sm.webp)
பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)