சுகாதாரத்துறைக்கு நன்கொடையாளர்களை உள்வாங்கும் தமது திட்டம்.. சஜித் வெளியிட்ட தகவல்
சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு வசதிப்படைத்தவர்கள் நன்கொடையாக வழங்குவது என்ற தங்கள் கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கை
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிவிப்பு, தனது கட்சி முன்மொழிந்து செயல்படுத்திய கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

அரநாயக்க மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
முன்னதாக, சூறாவளி பேரழிவிற்குப் பிறகு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் நன்கொடையாளர்கள் முன்வந்து உதவக்கூடிய தொகுப்புகளை அரசாங்கம் உருவாக்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam