ரணில் நடத்திய ரகசிய மந்திராலோசனை - சஜித் தரப்பு தமிழ் அரசியல்வாதிகள் இணைவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அரசியல் கலந்துரையாடலில் சஜித் தரப்பை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தன.
கொழும்பிலுள்ள(Colombo) பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் மற்றும் பி.திகாம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
சமகால அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அரசியல் கட்சிகள்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, துமிந்த திசாநாயக்க, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அறுதிப்பெரும்பான்மையுடன் பலமாக நிலையில் ஆட்சியல் உள்ளது.
தமிழ் அரசியல்வாதிகள்
இந்நிலையில் ரணில் - சஜித் தரப்பு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இந்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொடர்ந்தும் மறுத்து வந்த நிலையில், தற்போது அதில் நெகிழ்வு தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவரின் கட்சியை சேர்ந்த இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் ரணிலின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வி அடைந்த நிலையில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
