புதிய முன்னணியை உருவாக்க திட்டமிடும் சஜித்தின் பாரியார்
சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலானி பிரேமதாச(Jalani Premadasa), நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எடுத்துக் காட்டாக திகழும் பெண்களை ஒன்று திரட்டும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி சந்திக்க திட்டமிட்டிருந்த பெண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த குழுவினரை நேரடியாக தொலைபேசி அழைப்புகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விரைவில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய முன்னணி
இதன் முதற்கட்டமாக பல்லேபெத்த வித்தியாலயத்தின் கலை ஆசிரியை ஒருவரை சந்தித்த ஜலானி பிரேமதாசவினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எடுத்துக் காட்டாக திகழும் பெண்களை ஒன்று திரட்டி ஐக்கிய எதிர்க்கட்சியின் மகளிர் முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
