13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடகமாடும் சஜித்: விஜயதாச விசனம்

Dr Wijeyadasa Rajapakshe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Dharu Jun 23, 2024 11:22 AM GMT
Report

தேர்தல் அண்மிக்கின்றமையால் எதிர்கட்சி தலைவர், வடக்குக்கு சென்று 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில், நாடகமாடுகின்றார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் வடக்கு விஜயத்தின்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த தருணத்தில்தான் வடக்கு கிழக்கு மக்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் திடீர் கரிசனைகள் ஏற்பட்டுள்ளன.

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

வடக்கு - கிழக்கு மக்கள்

இவர்கள் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கு மக்கள் சம்பந்தமாக எந்தவிதமான கவனத்தையும் கொண்டது கிடையாது.

13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடகமாடும் சஜித்: விஜயதாச விசனம் | Sajith Makes A Drama About The 13Th Amendment

அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கூட திரும்பிப் பார்த்தது கிடையாது. குறிப்பாக, ஜே.வி.பி. 13ஆவது திருத்தத்துக்கு எதிராக இதுகாலம் வரையிலும் தமது கடுமையான எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தார்கள் அது நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதைக்காக படுகொலைகளைக் கூடச் செய்தார்கள்.

அத்தகையவர்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக பேசுவதற்கு எந்தவிதமான அருகதையும் இல்லை. அதேபோன்று தான் சஜித் பிரேமதசவும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைளின்போது எந்தவிதமான ஒத்துழைப்புக்களையும் செய்யாதே இருந்தார்.

மேலும், தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் வடக்கு மக்களிடத்தில் சென்று 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதாகவும் அதுபற்றி உரையாடுவதாகவும் கூறுகிறார்” என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

பொது ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US