GSP+ வரிச் சலுகையைப் பாதுகாக்க எதிர்க்கட்சி அநுர தரப்புக்கு ஆதரவு
GSP+ வரிச் சலுகையைப் பாதுகாக்க எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு GSP+ வரிச் சலுகை இன்றியமையாத ஒரு காரணியாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் மற்றும் பொது சேவை தொழிற்சங்க உறுப்பினர்களை சந்தித்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.
[6OHZGZM ]
"GSP+ சலுகை
"GSP+ சலுகை என்பது எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒரு சலுகையாகும். ஆனால் இந்த GSP+ சலுகை பல நிபந்தனைகளுடன் செயல்படுத்தப்படுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும், நல்லாட்சி செயல்படுத்தப்பட வேண்டும், நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மேலும் சுற்றுச்சூழல் தொடர்பான பல நிபந்தனைகளும் உள்ளன.
மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் உள்ளிட்ட இந்த நிபந்தனைகளை அரசு பின்பற்றத் தவறினால், GSP+ சலுகையை நாம் இழக்க நேரிடும். GSP+ சலுகையை நாம் கட்டாயம் பாதுகாக்க வேண்டும்.
இந்த மாத இறுதியில் தூதுக் குழு வரும்போது, அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு GSP+ சலுகையை நாம் பாதுகாக்க வேண்டும்.
இல்லையெனில், எமது ஏற்றுமதித் துறை முற்றாக அழிந்துவிடும். ஆடைத் துறை பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும்.
GSP+ சலுகை பற்றி பேசும்போது, நாம் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் குறித்து எமது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல் Manithan
