தனியாருக்கு விற்கப்படும் அரசாங்க தொலைக்காட்சி: சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் தொலைக்காட்சி அலைவரிசையொன்று தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று (14.08.2023) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

புதிய முதலீட்டாளர்களுக்கு விதிமுறைகள்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசை தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
புதிய முதலீட்டாளர்களை அரசாங்க அலைவரிசையில் இணைத்துக்கொள்ளும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்திற்கு அலைவரிசை வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது இந்த மற்றொரு அலைவரிசையை விற்க அனுமதி பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam