ஜனாதிபதி பதவியை ஏற்காதது ஏன்..! சஜித் பகிரங்க விளக்கம்
ஜனாதிபதி பதவியை தான் ஏற்காமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் நேற்று (15.08.2023) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு காலி நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச தனது விளக்கத்தை வழங்கியுள்ளனர்.
"நான் ஏன் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை எனப் பலரும் விமர்சிக்கின்றனர்.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய நிகழ்ச்சி
திருடர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அச்சத்தாலும், வெட்கத்தாலும்தான் ஜனாதிபதி பதவியை நான் ஏற்கவில்லை. புதிய ஆணையின்றி நாட்டின் பொறுப்பை ஏற்க மாட்டேன்.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளை மதித்து கொள்கை சார் தூய்மையான பயணத்தை மேற்கொள்ள நான் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல என்றும், நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய நிகழ்ச்சி நிரலே தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
