இலங்கைக்கான ஜப்பானிய தூதுவருடன் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாட்டாவை சந்தித்து விரிவான உரையாடலை முன்னெடுத்தார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(06.11.2026) இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் நிலைபேற்றுத் தன்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளல், பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் நிர்வாகம், அத்துடன் நீலப் பொருளாதாரத்தின் நிலையான அபிவிருத்தி உட்பட இருநாடுகளுக்கும் முக்கியமான பல பிரதான துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
பொருளாதார வாய்ப்பு
ஜப்பானின் உயர் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி, நவீன விவசாயம், கடல் தொழில்கள், நிலையான மீன்பிடித் தொழில், பெருங்கடல் அறிவியல் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய அபிவிருத்தி ஆகிய துறைகளில் மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
அனர்த்த அபாய முகாமைத்துவம், முன்எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஜப்பான் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அனுபவங்களை அங்கீகரித்து, பேரிடர் தயார்நிலை மற்றும் காலநிலையைத் தாங்கும் திறன் என்பன இரு தரப்பினராலும் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டன.
இரு தரப்பு உறவு
இலங்கையுடன் ஜப்பான் பேணி வரும் நீண்டகால நட்பு மற்றும் நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு வழங்கி வரும் பெறுமதிமிக்க பங்களிப்புகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய அரசுக்குத் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இரு தரப்பு உறவுகளைத் திறம்படப் பேணுதல், நிறுவன ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கை மக்களின் நலன் மற்றும் செழிப்புக்குப் பங்களிக்கும் நீண்டகால அபிவிருத்தி முன்னுரிமைகளை அடைவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கலந்தாய்வின் போது மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri