அனைத்து மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும்: சஜித் அதீத நம்பிக்கை
வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியடையும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டம், பசறை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மாகாணங்கள், அனைத்து மாவட்டங்கள் மற்றும் அனைத்து பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெல்லும் என்பதை சகல ஆய்வறிக்கைகளும் வெளிக்கொணர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
எனவே, நாட்டை வெல்லும் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
