மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட சஜித்
மகா சிவராத்திரி நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் இந்து பக்தர்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து கொண்டாடப்படும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, கொழும்பு 06 இல் அமைந்துள்ள மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று(26) மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சஜித் பிரேமதாஸ
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa), சிவபெருமானுக்காக நடைபெற்ற இந்து சமய வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆசி பெற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





