வலுக்கும் அனுர - சஜித் விவாத பேச்சு: சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பறந்த கடிதம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakke) இடையிலான விவாதத்திற்கு நடுவராக செயற்பட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) இந்த அஸ்ளைப்பினை கடிதம் மூலம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு விடுத்துள்ளார்.
குறித்த விவாதத்தை ஒழுங்கமைப்பதற்காகவும் ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளின் பண்டாரவின் வலியுறுத்தல்
அதேவேளை, விவாதத்திற்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் வேறு அலுவல்கள் இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, கட்சிகளின் பொருளாதார ஆலோசனைக் குழுக்களும் நேரடி விவாதம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்று நளின் பண்டார வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri