நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்: அடித்து கூறும் விமல்
தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல, முஸ்லிம்கள் மக்கள்தான் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தீவிரமயமாக்கல் என்பது சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாக வன்முறையைப் பயன்படுத்துவதை ஆதரிப்பது அல்லது எளிதாக்குவது உட்பட, தீவிரவாத நம்பிக்கை முறையைப் பின்பற்றும் செயல்முறையாக பொதுவாக வரையறுக்கப்படுகிறது.
வன்முறை செயல்முறை
சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது சித்தாந்த இலக்குகளை அடைவதற்காக பொதுமக்களை இலக்காகக் கொண்ட வன்முறை செயல்முறையாகும்.
அவர்களுக்கு மற்ற பிரிவினரோ, பிற மதத்தினரோ, பிற இனத்தவர்களோ நண்பர்கள் தேவையில்லை. அந்த வகையில் தீவிரவாதிகளாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் இந்த தீவிரவாத செயல்களால் முதலில் பாதிக்கப்படுவது கத்தோலிக்கர்கள் அல்ல. முஸ்லிம்கள் மக்கள்தான். முஸ்லிம்களை தாக்குவதை தடுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, புலனாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற கொடூரமான படுகொலை நடந்திருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |