அனுரவிற்கு தெரிந்த மொழியில் விவாதத்திற்கு தயார்: சஜித் பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிந்த மொழியில் விவாதம் நடாத்துவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கோழை போன்று தப்பிச் செல்லாது எந்தவொரு விவாதத்திற்கும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தரப்புக்களும் விவாதம் செய்வதன் மூலம் எந்த தரப்பிற்கு அதிகாரம் வழங்குவது பொருத்தமானது என்பதனை மக்கள் தீர்மானிக்க முடியும் என சஜித் தெரிவித்துள்ளார்.
அனுரவிற்கு மீளவும் அழைப்பு
கோழையைப் போன்று தப்பிச் செல்லாது தெரிந்த மொழியில் விவாதத்திற்கு வருமாறு அனுரவிற்கு மீளவும் அழைப்பு விடுப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.
தனமல்வில பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை ஆட்சி செய்வது குறித்த எதிர்கால கொள்கைகளை விளக்கும் வகையில் விவாதம் நடாத்துவதற்கு தயார் என சஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 3 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
