ஆட்சியை தக்கவைக்க தினந்தோறும் மக்களை ஏமாற்றும் திசைகாட்டி அரசு - சஜித் பகிரங்க குற்றச்சாட்டு
திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத் தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று(25.07.2026) ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் நடைப்பெற்ற தர்ம போதனை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகளை அவமதிக்கும் அரசு
டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
விவசாயிகளை "கடவுள்" என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து "கசிப்புக்காரன்" என்று அவமதிக்கின்றனர்.

நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும், 120 ரூபா விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.
மேலும், அரசுக்குச் சொந்தமான நெல் களஞ்சியங்கள் வெளிநாட்டு அரிசியால் நிரப்பப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின்போது ரூபா 2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான 100 சீமெந்து பொதிகளையும் அவர் அன்பளிப்பாக வழங்கியள்ளமை குறிப்பிடத்தக்கது.






1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri