சஜித் மக்களிடம் மன்னிப்பு கோருவார்: வடிவேல் சுரேஷ் உறுதி
"சஜித் பிரேமதாச விரைவில் பதுளை வருவதாகவும் அவ்வாறு வரும்போது அவர் மக்களிடம் மன்னிப்பு கோருவார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளை - மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு வருகை தருவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இறுதி நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் வடிவேல் சுரேஷ் கோபமடைந்துள்ளார்.
அத்துடன் பதுளை- மடுல்சீமை மக்களிடம் சஜித் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
தொடர்வதற்கு நான் தயாரில்லை
இந்நிலையில், மே தின உரையின் போதும், "பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மன்னிப்பு கோர வேண்டும்.
அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தைத் தொடர்வதற்கு நான் தயாரில்லை" - என்று வடிவேல் சுரேஷ் எம்.பி. திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
மக்களுடன் கலந்துரையாடுவார்
இதன்பின்னர் எதிர்க்கட்சித் தலைவரை அவர் நேற்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வடிவேல் சுரேஷ், "நடந்த சம்பவம் தொடர்பில் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்யிட்டுள்ளார்.
விரைவில் பசறை, லுணுகலை, மடுல்சீமை பகுதிகளுக்கு அவர் வருவார். மக்களுடன் கலந்துரையாடுவார். அதன்போது மக்களிடம் அவர் மன்னிப்பு கோருவார். நான் எனது மக்களின் பிரதிபலிப்பையே வெளிப்படுத்தினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
