அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் சஜித் அணியினர் முக்கிய சந்திப்பு
தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூடியுள்ளது.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இன்று இடம்பெறுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும், ஜனாதிபதி மீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி
சபாநாயகர் தேர்வின்போது, தமது கட்சியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
களமிறக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
தெரிவித்தார்.


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
