பரிசோதனைகள் குறித்த விலை நிர்யணம் தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
ரெபிட் என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை மறுசீரமைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
என்டிஜன் பரிசோதனைக்கான கட்டணத்தை 600 ரூபாவாகவும், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை 2000 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
என்டிஜன் பரிசோதனைக்கான கட்டணம் 2000 ரூபாவாகவும், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான கட்டணம் 6500 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது குறிப்பிட்ட ஒர் தரப்பிற்கு லாபமீட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ள்ளார்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத் தளத்தின் தகவல்கள் அழிக்கப்பட்டமை தற்செயலாக இடம்பெற்ற சம்பவம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
பரிசோதனைகளில் ஏகபோக உரிமையை ஏற்படுத்தி சிலரை மட்டும் லாபமீட்டச் செய்யும் முயற்சியை ஏற்க முடியாது என அவர் ஊடக அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri