சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

CID - Sri Lanka Police London Ranil Wickremesinghe Crime Branch Criminal Investigation Department
By Dhayani Sep 30, 2026 08:12 AM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி மீண்டும் அழைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.  

பொது சொத்துச்சட்டத்தின் கீழ் ரணில் விக்ரமசிங்க மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வழக்கு கோப்பு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரச சட்ட ஆலோசகர் சமதரி பியசேன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வழக்கு விசாரணை நிலை குறித்து அறிவிக்க மேலும் ஒரு திகதியை வழங்குமாறு அரச சட்ட ஆலோசகர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில்கொண்டு, இச்சம்பவம் குறித்து சட்டமா அதிபர் ஆலோசனை வழங்குவதற்காக, இவ்வழக்கை நவம்பல் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக 16.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்..  

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவிற்கு (செப்டம்பர் 2023) இல் தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது.

பிணையில் செல்ல அனுமதி

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணிகள் மற்றும் அவரது தரப்பு, இது பிரித்தானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலும் பல்கலைக்கழக அழைப்பின் பேரிலும் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது மனைவியின் பயணச்செலவுகள் தனிப்பட்ட ரீதியில் ஏற்கப்பட்டதாகவும் கூறி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Ranils Case To Be Taken Up Today

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025 ஆகஸ்ட் 22 அன்று ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.



சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவோருக்கு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவோருக்கு எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்



மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US