மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால் சபை அமர்வை புறக்கணித்த சஜித் தரப்பு! ஆளுந்தரப்பு சாடல்
"இன்று வீடமைப்பு அமைச்சு தொடர்பான விவாதம் நடக்கவுள்ளது. எனவே, அவ்வமைச்சுப் பதவியை வகித்த சஜித் பிரேமதாஸ செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை அமர்வை புறக்கணித்துள்ளனர் என ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சபையில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,
'எதிரணியின் செயற்பாடு மோசமாக உள்ளது. சபாநாயகரைக் கூடத் தாக்குவதற்கு முற்படுகின்றனர். நீங்கள் ஜனநாயகத் தலைவராக இருக்கின்றீர்கள்.
எதிரணிக்கு அதிக
வாய்ப்பை வழங்குகின்றீர்கள். எனவே, உங்கள் மீது கை வைப்பதற்கு எவருக்கும் நாம்
இடமளிக்கமாட்டோம்.
எதிரணியினர் ஊடக பிரச்சாரத்துக்காகவும், சர்வதேசத்துக்காகவுமே சபை அமர்வுப்
புறக்கணிப்பு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam