இந்த அரசுக்கு எதிராக மக்கள் முன்னோக்கி வருவது நிச்சயம்! ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தால், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்நோக்கி வருவது நிச்சயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனரவிரட்ன (John Seneviratne) எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியில்லை. கட்சி என்ற வகையில் முன்நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர்கள் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வுகாண ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதனையும் கலந்தாலோசிப்பதில்லை என்றாலும் நாட்டுக்கு நல்லது நடக்குமாயின் அது எனக்கு பிரச்சினையில்லை.
அரசாங்கம் மீது மக்கள் மிகப் பெரிய அதிருப்தியில் இருக்கின்றனர். அரசாங்கத்தின் மீது ஏற்படடுள்ள அதிருப்தி பயன்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியால் மக்களிடம் சென்றடைய முடியாது.
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு, ஆட்சிக்கு வரலாம் என சஜித் பிரேமதாச காணும் கனவும் வெறும் கனவு மாத்திரமே எனவும் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
