இறுதி நேரத்தில் இந்திய ரோவின் பார்வையில் சஜித்! முடிவை மாற்றிய அமெரிக்கா
இந்தியாவிற்கு ஏற்றதொரு தலைவராக சஜித் பிரேமதாசவை இந்தியா ஒரு போதும் பார்க்காது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையான ஆட்சியை கொண்டு செல்லக்கூடிய சிறந்த தலைவராக சஜித் பிரேமதாசவினால் செயற்பட முடியாது என்பதினை அறிந்த இந்திய ரோ அவரின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை போன்ற உடனுக்குடன் முடிவெடுக்க கூடிய ஒரு தலைவரையே இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பார்க்கின்றது.
சஜித் பிரேமதாச என்பவர் ஒரு பலமில்லாத தலைவர் என்பதனால் இந்தியா அவரை விரும்பினாலும், அவரை ஒருபோதும் இந்தியாவிற்கு ஏற்றதொரு தலைவராக பார்க்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
