சஜித் பிரேமதாச மற்றும் அவரின் மனைவியின் உடல்நிலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருடைய மனைவி ஜலனி பிரேமதாச ஆகியோரின் உடல் நிலை முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ஜலனி பிரேமதாசவுக்கு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டதாக வெளியான தகவலை எதிர்க்கட்சி அலுவலகம் மறுத்துள்ளது.
அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இறுதியாக கிடைத்த தகவலின்படி எதிர்க்கட்சி தலைவரின் நாடாளுமன்ற அலுவலகத்தில் பணியாற்றும் 10பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின்
பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டமை
குறிப்பிடத்தக்கது.