சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சாய்ந்தமருது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோடம்பழ சுயேட்சை கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மாளிகைக்காடு சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் எல்லை நிர்ணய அறிக்கையை கையளித்துள்ளனர்.
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை
உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்கள் இனப்பரம்பல் நிலத்தோற்றம் மற்றும் பொது வசதிகளை கருத்திற்கொண்டு புதிதாக எல்லை நிர்ணயத்துக்கு உட்படுத்தப்படும்.
தேசிய எல்லை நிர்ணயக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்கும் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக்குழு எதிர்பார்த்துள்ள நிலையில் மேற்படி சந்திப்பில் மகஜர் கையளிக்கப்பட்டு குறித்த மகஜரில் எதிர்காலத்தில் சாய்ந்தமருது பகுதியில் 7 வட்டாரங்களின் தேவை குறித்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் 7 வட்டாரங்கள் கிடைக்காவிடினும் கூட 6 வட்டாரங்களையாவது பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும் மேற்குறித்த சந்திப்பில் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தேவைப்பாடுகள் அபிவிருத்திகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டும் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் மாளிகைக்காடு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல்களின் நிர்வாகிகள், உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
