கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாதக் குழு..! சஹ்ரானுக்கு பதிலாக புதிய தலைவர் - வெளியான தகவல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் எச்சங்கள், அம்பாறை மற்றும் கல்முனைப் பகுதிகளில் மீண்டும் ஒன்றிணைய முயற்சிப்பதாக புலனாய்வுத் துறையினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இணைய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அம்பாறை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கைகளை மீண்டும் திட்டமிட்டு, அதன் புதிய தலைவராக உருவெடுக்க நபர் ஒருவர் முயன்று வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நபர், 1990ஆம் ஆண்டு பிறந்தவர் என்பதுடன் 'கல்முனை சியாம்' என்றும் 'அபு ஹசன்' என்றும் அழைக்கப்படுகிறார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது
என்டிஜே அமைப்பின் அம்பாறை மாவட்டத் தலைவராகச் செயல்பட்ட இவர், 2019 மே மாதம் அம்பாறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார். இவர் இன்னமும் ஐஎஸ் தீவிரவாதக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவே உள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாரம்மல கெக்குணகொல்ல பகுதியில் வசித்து வரும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவை, இந்த அபு ஹசன் நேரடியாகச் சந்தித்துத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தத் திருமண யோசனையை பாத்திமா ஹாதியா உடனடியாக நிராகரித்துள்ளார். அதன் பின்னரும் பின்வாங்காத அபு ஹசன், பாத்திமா ஹாதியாவின் பெற்றோரைச் சந்தித்துத் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
"தான் ஏற்கனவே ஒருமுறை இந்தச் சம்பவங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், மீண்டும் இவ்வாறானதொரு நிலைக்கு முகம் கொடுக்கத் தயாராக இல்லை" என்றும் பாத்திமா ஹாதியா தெரிவித்துள்ளார்.
2019 இல் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது அங்கிருந்த ஒரு தொகை பணம், இந்தக் கல்முனை சியாமின் கைக்குச் சென்று சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுரவின் மக்கள் பேரணி
தற்போது இந்தக் கல்முனை சியாமினோடு தொடர்புடைய 6 சந்தேகநபர்களைப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அத்துடன், உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து போதிய சாட்சியங்கள் இன்மையால் விடுவிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் இக்குழுவோடு தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடு முழுவதும் நடத்தும் மக்கள் பேரணிகளின் ஒரு பகுதியாக, கல்முனை மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளிலும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த பேரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருவதாக இணைய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, சஹ்ரான் ஹாசீமின் இடத்திற்கு புதிய தலைவர் ஓருவர் உருவாகி உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri