யாழில் எலி எச்சத்துடன் சவ்வரிசி விற்பனை: உரிமையாளருக்கு நீதிமன்றம் அபராதம்
யாழ்ப்பாணத்தில் எலி எச்சத்துடன் சவ்வரிசி மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 36ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவில் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், பிரபல பல்பொருள் அங்காடியில், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையில் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்துள்ளார்.
நீதிமன்றம் விதித்துள்ள அபராதம்
சோதனை நடவடிக்கையின் போது, எலி எச்சங்களுடன் கூடிய சவ்வரிசி மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் இந்த சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றில் முன்னிலையான வர்த்தகர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதையடுத்து, வர்த்தகரை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
அத்துடன், அவருக்கு 36 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.