இலங்கையில் நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் சாகர காரியவசம் கூறியுள்ள விடயம்
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்குக் காரணமானவர்கள் மொட்டுக் கட்சியை விட்டு விலகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அதனையொட்டி எழுந்த இளைஞர்களின் போராட்டம் என்பவற்றுக்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது மொட்டுக் கட்சியை விட்டும் விலகிச் சென்றுவிட்டார்கள்.
சர்வ கட்சி அரசாங்கம்
இந்த நிலையில் ஜனாதிபதி தொடர்ந்தும் சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

தற்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்வதைப் போன்றே உடனடியாக அரசியல் ஸ்திர நிலையையும் ஏற்படுத்திக் கொள்வது மிக முக்கியமான விடயமாகும் என தெரிவித்துள்ளார்.