கம்மன்பிலவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறவில்லை - சாகர காரியவசம்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வாபஸ் பெறப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை அழித்த ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றுக்கு மீளவும் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள இடமளிக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உதய கம்மன்பிலவுடன் தனிப்பட்ட ரீதியில் விரோதம் எதுவும் கிடையாது எனவும், கொள்கை ரீதியில் அவரது நடவடிக்கைகளையே இன்றும் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
