மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் தினசரி நடவடிக்கைகள் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறன்
சர்வதேச விதிகளின்படி, இந்த பராமரிப்பு பணிகள் 45 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனூடாக, எதிர்வரும் மூன்று வருடங்களுக்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் அதிகபட்ச உற்பத்தி திறன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயல்பாட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
