நாட்டு மக்களுக்கு மற்றுமொரு பேரிடி! மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 3 ஆம் திகதி முதல் ஜனவரி 30 ஆம் திகதி வரை மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க தேவையான மசகு எண்ணெய் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாட்டிற்கு தேவையான மசகு எண்ணெய் கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டுக்குத் தேவையான மண்ணெண்ணெய், விமான எரிபொருள் என்பன சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் மண்ணெண்ணெய்க்கு பாரியளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
