ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் - முன்னாள் அமைச்சர் ஆரூடம்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி கணித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் எதிர்வரும் மாதங்களில் சர்வதேச ஆதரவின் ஊடாக மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சலுகைகள்
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து இலங்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களும் சாதகமாகவே இருந்ததாக தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிதி மற்றும் சட்ட நிபுணர்களை அரசாங்கம் நியமித்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைக்கும் என நம்புவதாகவும் அலி சப்ரி கூறியுள்ளார்.
இலங்கையை உறுப்பு நாடாக பாதுகாக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியம் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam