செப்டெம்பருக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி! நம்பிக்கை வெளியிடும் ரணில்!
செப்டெம்பருக்குள் உதவி
இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாம், நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டாலினாஜோர்ஜிவா ( Kristalina Georgieva)வுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியபோது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருமாறு அழைப்பு
இதன் போது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக, கூடிய விரைவில் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு,தாம் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri