ரோகித போகொல்லாகம குறித்த பரிந்துரை சரியானதே - அலி சப்ரி
பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் ரோகித போகொல்லாகமவை பரிந்துரை செய்தமை சரியான தீர்மானம் என தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமக்கும் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவிற்கும் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
போகொல்லாகம முன்னாள் அமைச்சர் என்ற வகையில் அந்த விடயத்தையும் கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானம்
லண்டன் போன்ற ஒரு முக்கியமான இடத்திற்கு போகொல்லாகம பொருத்தமானவர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பரிந்துரை செய்வதற்கு முன்னதாக ஜனாதிபதி இந்த விடயம் குறித்து தம்முடன் கலந்தாலோசித்தார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்கு ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளி விவகார சேவையில் ஆளணி வள பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதனால் சில முக்கிய பதவிகளுக்கு பிற நபர்களை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான நியமனங்கள் வெற்றி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
