சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் நித்திரையில் உயிரிழப்பு - விசாரணைகள் தீவிரம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞான மற்றும் உடற்கல்வி பிரிவின் இறுதியாண்டு மாணவரொருவர் இன்று (21) அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஹர்ஷ தனஞ்சய என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தின் கபடி அணியின் தலைவராகவும்,சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்துள்ளார்.
மாணவனின் மரணத்திற்கான காரணம்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றியுள்ள இவர், விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த போது மயங்கிய நிலையில் ஏனைய மாணவர்கள் அவரை பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பம்பஹின்ன வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது குறித்த மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாணவனின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
