சமஸ்டிக்கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்க முடியுமா..! சபா குகதாஸ் பகிரங்க சவால்
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டிக்கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார் என்றார்.
அதேவேளை, நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தலாகிய மாறிய இலங்கை அரசாங்கம்: சர்வதேசத்திடம் தீபச்செல்வன் முன்வைத்துள்ள கோரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri