இலங்கை அணியை 42 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்திய தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தது.
அதற்கமைய, தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அசித பெர்னாண்டோ
தென்னாபிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் பவுமா 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
🔄 | Change of Innings
— Proteas Men (@ProteasMenCSA) November 28, 2024
The Proteas demolish the Sri Lankan batting line-up🔥🏏🇿🇦
🇱🇰Sri Lanka manage to post 42/10 in only 13.5 overs of play.#WozaNawe #BePartOfIt #SAvSL pic.twitter.com/SfGojn5G6o
இதன்படி இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
கமிந்து மெண்டிஸ்
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
மேலும், தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன் 7 விக்கட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |