இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்…

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka
By Theepachelvan Nov 26, 2024 10:50 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report

இறந்த மக்களுக்கு அஞ்சலி செய்வது என்பது ஒரு பண்பாட்டு உரிமை. அது உலகம் ழுமுவதும் பல்வேறு இயல்புகளைக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை வழிபடுவதும் நினைகூர்வதும் தமிழர்களின் பண்பாடு. அந்தப் பண்பாட்டிற்கு இராண்டாயிரம் ஆண்டுகள் கடந்த வரலாறு இருக்கிறது.

அத்துடன் போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் வைத்து வழிபடுகின்ற மரபும் பண்டைய தமிழ் மக்களின் பண்பாடாகும். அத்துடன் உலகில் போரில் இறந்த மக்களை நினைவுகூருகின்ற உரிமை உலகின் அனைத்து மக்கள் சமூகத்திற்கும் பொதுவானதாகும்.

யார் யாருடன் போரிட்டாலும் அதில் இறந்தவர்களை நினைவுகூர்கின்ற விடயத்தில் பாரபட்சமின்றி நினைவேந்தல் உரிமையை வழங்க வேண்டும் என்பது பன்னாட்டு சூழலில் வலியுறுத்தப்படுகின்றது. இலங்கைப் போரிலும் இறந்தவர்களை நினைவுகூர்வதன் உரிமையை பாரபட்சம் இன்றி வழங்க வேண்டும் என பன்னாட்டு சமூகம் வலியுறுத்தி வந்தது.

 இன ஒடுக்குமுறையின் கோரம்

ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். இன உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், மொழி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொழில் மற்றும் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், ஈழத்தமிழ் மக்களின் தாயகம் அபகரிக்கப்பட்ட நிலையில் அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலமைக்கு தள்ளப்பட்டார்கள்.

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… | About Maveerar Remembrance Day Essay

அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து அதிலும் இனப்படுகொலைகளே பதிலாகவும் பரிசாகவும் வழங்கப்பட்ட நிலையில் தான் ஈழத்தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தத் தீர்மானித்தார்கள். இதன் காரணமாகத்தான், வன்முறை எம்மீது திணிக்கப்பட்டது என்றும் நாம் விரும்பி ஆயுதங்களை ஏந்தியவர்களில்லை என்றும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் அழுத்தம் திருத்தமாகக் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் தான் ஈழ மண்ணில் உன்னதமான ஒப்பற்ற விடுதலைப் போராட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்பவர்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழ மக்களில் இருந்து பிறந்த போராளிகள். இன ஒடுக்குமுறையின் கோரம்தான் எங்கள் மண்ணில் ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற நிலையை ஏற்படுத்தியது.

என்ற போதும் கூட, இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஒடுக்கவும் மக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்களப் பேரினவாதம் நிகழ்த்தியது. இதனால் ஒன்றரை இலட்சம் மக்களை இழந்தோம். இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற வேளை துவங்கிய இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் கடந்தும் தொடர்கிறது.

யாரோ ஒருவருடைய பிள்ளை

சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகப் போராடிய ஒவ்வொரு மாவீரரும் யாரோ ஒருவருடைய பிள்ளை. அவர்கள் ஈழ மண்ணின் பிள்ளைகள். அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள். விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழ மக்களும் வேறு வேறானவர்களல்ல. ஒவ்வொரு வீட்டிலும் கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் பிறந்த பிள்ளைகள், எல்லாம் துறந்து தேச விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தார்கள்.

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… | About Maveerar Remembrance Day Essay

ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு தந்தையும் பெற்றெடுத்து, சீராட்டி வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் எங்கள் மாவீரர்கள். போராட்டத்திற்கு அனுப்பிவிட்டு விடுமுறையில் வரும்போது அந்தப் பிள்ளைகளை ஆரத்தழுவி பிடித்த உணவுகளை செய்துகொடுத்து, மீண்டும் களம் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எங்கள் மாவீரர்கள்.

மாவீரர் துயிலும் இல்லங்களை இலங்கை அரச படைகள் போரின் இறுதித் தருணத்தில் இடித்தழித்தன. இன்று இடிக்கப்பட்ட கல்லறைகளில் பாகங்களை வைத்துதான் நினைவேந்தல் செய்கிறோம்.

இடிக்கப்பட்ட ஒவ்வொரு கல்லறையிலும் உறங்குவது யாரோ ஒருவருடைய பிள்ளையே. ஒரு காலத்தில் மாவீரர் நாளின்போது துயிலும் இல்லத்திற்கு போராளித் தோழர்களும் பெற்ற அன்னையரும் தந்தையரும் உடன் பிறந்தாரும் உற்றாரும் உரித்துடையாரும் ஒன்றுகூடி கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களுடன் கண்ணீரை பகிர்ந்து கனவை பகிர்ந்து இலட்சிய வேட்கையைப் பகிர்ந்து கொள்வர்.

இப்போது அந்தக் கல்லறைகள் மண்ணுக்குள் எங்கோ மறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு தாயினுடைய பிள்ளையின் கல்லறையும் இப்படியாக மண்ணுக்குள் இடம் தெரியாது விதைந்து கிடக்கின்றன.

 ஆற்றுப்படுத்தும் வழிமுறை

நினைவுகூர்தல் என்பது ஒரு ஆற்றுப்படுத்தல் வழிமுறையாகும். காயங்களில் இருந்தும் இழப்புக்களில் இருந்தும் மீள்வதற்கான வழிமுறையாகும். உலகம் முழுவதிலும் நினைவேந்தல்களின் வழியாக மீள் வாழ்வும் மீட்சியும் முன்னெடுக்கப்படுகிறது.

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… | About Maveerar Remembrance Day Essay

இந்த அடிப்படையில்தான் நினைவேந்தல்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஈழத் தமிழ் சமூகம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் வலியுறுத்தி வந்தது.

அந்த வகையில் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ள தேசிய மக்கள் சக்தி, மாவீரர்களை நினைவேந்த தடையில்லை என்று அறிவித்துள்ளன. இருந்தபோதும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தொடக்கம் எதிர்காலத்தில் நினைவேந்தலை இன்னமும் அங்கீகரிப்பதற்கான ஒரு சூழலை தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களையும் தந்தையர்களையும் பார்க்கின்ற போது அவர்களின் முகங்களில் ஆயிரம் கதைகள் தெரிகின்றன. வீரமும் தெரிகிறது. ஈரமும் தெரிகிறது. தியாகமும் தெரிகிறது.

இந்த முகங்களை பார்த்தாலே, இந்த முகங்களைப் படித்தாலே இலங்கை அரசு திருந்த முடியும். உலக நாடுகள் உணர முடியும். தாம் பெற்றெடுத்த அருமைப் பிள்ளைகளை இந்த மண்ணுக்காக விதைத்துவிட்டு கண்ணீரோடும் துயரத்தோடும் இந்த மக்கள் துடிக்கின்றனர். உண்மையில் மாவீரர் நாளில் ஏற்றப்படும் விளக்குகள் நெய்யினால் மாத்திரம் எரிவதில்லை. மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களதும் தந்தைமார்களதும் உறவுகளதும் கண்ணீராலுமே எரிகின்றன.

சிங்கள மக்கள் 

ரங்கன செனவிரத்ன, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர். மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளாக நாம் 2009இல் சந்தித்த போதும் சிங்கள தேசம் எங்கள் போராளிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சிங்கள மாணவர்கள் மத்தியில் ரங்கனவிடம் வலியுறுத்தி உரையாற்றினேன்.

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… | About Maveerar Remembrance Day Essay

பின்னர் எங்களுக்குள் தொடர்புகள் இருக்கவில்லை. ஆனால் நடுகல் நாவலை படித்துவிட்டு வந்த சிங்கள இளைஞர்களில் ரங்கனவும் வந்திருந்தார். அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்து அண்ணாவின் வீரவணக்கப் படத்திற்கு தீபம் ஏற்றிவிட்டு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றி அஞ்சலித்தார்கள்.

கோட்டாபயவின் காலத்தில் அப்போது மாவீரர் நாளை அனுஸ்டிக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த வருத்தம் பற்றி ரங்கனவுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். துயிலும் இல்லம் வந்த ரங்கன உள்ளிட்ட சிங்கள இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

"இந்த அரசு உங்களுக்கு விளக்கேற்ற அனுமதி மறுத்திருக்கிறது. சுதந்திரத்திற்காகப் போராடிய உங்களுக்கு தெற்கிலிருந்து தீபங்களை ஏற்றுவோம்" என்று கல்லறைகளுடன் பேசினார் அவர். எங்கள் போராளிகளை சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டு எங்கள் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கும் இலக்கின் தொடக்கமாக தென்பட்டது. அந்தப் புள்ளியை நோக்கி வரலாறு நகர்ந்தே தீரும்.

நாம் சிங்கள மக்களை துயிலும் இல்லம் நோக்கி அழைக்க வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்களும் மாவீரர்களின் கல்லறைகள் ஒவ்வொன்றும் சிங்கள மக்களாலும் பன்னாட்டுச் சமூகத்தாலும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.

அதில் இருந்துதான் இலங்கைத் தீவில் மாற்றங்கள் உருவாகக்கூடும். முதன் முதலில் இலங்கை அரசு ஒன்று மாவீரர் நினைவேந்தலுக்கு தடையில்லை என அதிகாரபூர்வமாகச் சொல்லியிருக்கிறது. இது அடுத்த கட்டங்களை நோக்கி நகர வேண்டும்.

அத்துடன் இன்றைய அரசு தற்போது இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களையும் விடுவிக்க வேண்டும். ஜேவிபியும் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கிறது. இன ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமாக ஆயுதம் ஏந்தி இந்த மண்ணில் விதைக்கப்பட்ட எம் மாவீரர்களின் தியாகத்தையும்  தாகத்தையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 26 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

03 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், ஊர்காவற்துறை, பரிஸ், France

04 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை

03 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கணுக்கேணி, Münster, Germany, Reading, United Kingdom

05 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இடைக்காடு, Markham, Canada

28 Mar, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US