முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தயார் - எஸ்.எம். மரிக்கார்
கட்சி கோரிக்கை விடுத்தால் மக்களின் அனுமதியுடன் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயாரா என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே மக்கள் எனக்கு வாக்களித்தனர். மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி நான் சிந்தித்துக் கூட பார்க்கவில்லை.
கட்சி கோரிக்கை
எனினும், கட்சி கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அதற்கு மக்களின் அனுமதி கிடைக்கப் பெற்றால் நான் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



