ஊழலற்ற கட்சி நாங்களே..! ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்த எஸ்.எம். மரிக்கார்
“ஐக்கிய மக்கள் சக்தி“ என்பது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் இல்லாத, தூய்மையான அரசியலில் ஈடுபடும் நபர்களைக் கொண்ட ஒரே கட்சி என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(13.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் அற்ற கட்சி SJB
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால ஊழல் மோசடிகளை நிரூபிக்கும் பலம் தற்போதைய அரசிடம் இல்லை. மாறாக, நிலக்கரி மோசடி குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 6 மாத கால அவகாச ஆணைக்குழுவின் தீர்ப்பு, 3 மாதங்களில் வெளிவரும் என ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது அந்த ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படாத ஒரு கட்சிச் செயலாளருக்கு, நீதித்துறை மற்றும் சுயாதீன நிறுவனங்களின் பணிகளில் தலையிட்டு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட எந்த உரிமையும் இல்லை.
தற்போது மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளின் விலைகள் அதிகரித்துள்ளதால் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு திறந்த பொருளாதாரத்துக்குப் பதிலாக 'தீவு மனப்பாங்குடன்' மூடிய பொருளாதார முறையைப் பின்பற்றுவதால் வெளிநாட்டு முதலீடுகள் வருவதில்லை.
நாட்டை காப்பாற்றுவது மக்களே..
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரசுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை, அதற்கு பதிலாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் ஆக்கபூர்வமான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைக்க அவர் தயாராக இருக்கின்றார்.
இதேவேளை, நகர அபிவிருத்தி அல்லது மின்சக்தித் துறையை பலப்படுத்தத் தானும், நாட்டின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே தயாராக உள்ளோம் என்பதை நினைவூட்டிக் கொள்ள விரும்புகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன.
ஏனைய பொது எதிர்க்கட்சிகளுடன் இணையவில்லை எங்களுக்கு விருப்பம் இல்லை. தேர்தல்களில் தோல்வியடைந்த போதிலும், மக்கள் எமது கட்சியின் உறுப்பினர்களை 'திருடர்கள்' என்று அழைக்கவில்லை என்பது எமக்குக் கிடைத்த பெருமையாகும். எனவே, யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாட்டின் எதிர்காலத்தை அனுபவம் வாய்ந்த எமது குழுவிடம் ஒப்படைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam