விண்வெளி இமேஜிங் நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் அரியவகைக் காட்சி
விண்வெளி இமேஜிங் நிறுவனமான சென் (Sen) வெளியிட்டுள்ள புதிய காணொளியில் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பறவைக் காட்சி (bird's-eye view) காண்பிக்கப்பட்டுள்ளது.
2024 ஏப்ரல் 30 ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்த காட்சியானது நிலப்பரப்பு மற்றும் சுற்றியுள்ள நீர்நிலைகள் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
பரவலாகப் பகிரப்பட்ட காணொளி
இது பிராந்தியத்தின் புவியியல் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய விபரங்களை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து காட்டுகிறது.
சென் (Sen), பூமி மற்றும் விண்வெளி பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களைச் சேகரித்து, அதை உலகளவில் அணுகக்கூடியதாக மாற்றியமைக்கும் ஒரு நிறுவனமாகும்.
புதுமையான விண்வெளி அடிப்படையிலான இமேஜிங் தொழில்நுட்பங்களில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளதோடு, அதன் சொந்த செயற்கைக்கோள்களில் புகைப்படக்கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் உலகம் மற்றும் அதற்கு அப்பால் பலவிதமான முன்னோக்குகளைப் படம்பிடிப்பதை சென் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அண்மைய காணொளி, தெற்காசியத் துணைக் கண்டத்தின் அளவு மற்றும் சிக்கலான தன்மையின் காட்சியை வழங்குகிறது.
பார்வையாளர்கள் இந்தியா மற்றும் இலங்கையின் கடற்கரைகள் மற்றும் முக்கிய நகரங்கள், ஆறுகள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புக்கள் ஆகியவற்றை தெளிவாக காணமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |