முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு முன்னால் ரயர் எரிப்பு
அக்கரைப்பற்றில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனாவின் வீட்டிற்கு முன் ரயர் தீயிட்டு எரிக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
காலிமுகதிடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த நிலையில் அக்கரைப்பற்று சாகாம வீதியிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனை கட்சியின் அமைப்பாளருமான பொடியப்பு பியசேனவின் வீட்டிற்கு முன்னாள் நேற்று இரவு ஒன்று திரண்ட இளைஞர்கள் வீதியில் ரயர்களை போட்டுத் தீயிட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், அங்கு பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தனர்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri